fbpx

ரசிகர்களே..!! முதல் ஆசிய கோப்பை பற்றி தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..!!

இப்போதுள்ள இளம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2000-க்கு முன் நடந்த கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை என்பதால், முதல் ஆசிய கோப்பை தொடரில் இருந்தே தொடங்குவோம். முதல் ஆசிய கோப்பை தொடர் 1984இல் நடந்தது. ஒருநாள் போட்டிகளாக நடந்த இந்த புதிய தொடரில், 3 ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் ரவுண்டு ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு மோதின. இதில் வெல்லும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.

அரையிறுதி, இறுதிப் போட்டி, இதெல்லாம் அப்போது கிடையாது. யார் அதிகப் புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே கோப்பையை வெல்வார்கள். இந்த தொடரில் மொத்தமே 3 போட்டிகள் தான். முதல் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்து இலங்கை, இந்தியா போட்டி. அதில், இலங்கை இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 41 ஓவர்களில், 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் சுரிந்தர் கண்ணா 51 ரன்கள் மற்றும் பார்கர் 32 ரன்கள் அடித்து 22வது ஓவருக்குள் 97 ரன்கள் இலக்கை அடைந்தனர். இந்தியாவை எளிதாக வெற்றி அடைய வைத்தனர். 3-வதாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இந்தியா 188 ரன்கள் எடுத்தது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த போட்டியில் பாகிஸ்தானின் 4 வீரர்கள் ரன் அவுட் ஆனார்கள். அதுவே, அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ரவி சாஸ்திரி 3, ரோஜர் பின்னி 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இரண்டு போட்டிகளை வென்ற இந்தியா தொடரை வென்றது. இரண்டாம் இடத்தை இலங்கை பிடித்தது. பாகிஸ்தான் ஒரு வெற்றியும் பெறாமல் ஏமாற்றம் அடைந்தது. இந்த தொடரின் சிறந்த வீரர் விருது இரண்டு அரைசதம் அடித்த இந்தியாவின் சுரிந்தர் கண்ணாவுக்கு கிடைத்தது.

இந்நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி (இன்று)கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணியினர் மோதிக் கொள்ள இருக்கும் நிலையில், இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி பொது விடுமுறை..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Sun Sep 17 , 2023
தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிலாடி நபி இசுலாமிய நாட்காட்டியில் 3-வது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் முகமது நபி அவர்களின் பிறந்த நாளாகும். ரபிஉல் அவ்வல் மாத பிறை செப்டம்பர் 16ஆம் தேதி அதாவது நேற்று மாலை தமிழ்நாட்டில் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி விழா கொண்டாடப்படும் என்று அரசின் தலைமை ஹாஜி […]

You May Like