fbpx

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்..!! அதிரடி காட்டிய புஜாரா, ஷுப்மன் கில்..!! அபார வெற்றி பெற்றது இந்தியா..!!

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி, ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதனத்தில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 404 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆல்-அவுட் ஆனது. பின்னர், களமிறங்கிய வங்காளதேச அணி, இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. இறுதியாக, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்..!! அதிரடி காட்டிய புஜாரா, ஷுப்மன் கில்..!! அபார வெற்றி பெற்றது இந்தியா..!!

பின்னர் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 258 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. ஷுப்மன் கில் மற்றும் புஜாரா அதிரடியாக விளையாடி சதமடித்தனர். தொடர்ந்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. இதையடுத்து இறுதி நாளான இன்று, ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் வங்கதேச அணி 324 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Chella

Next Post

#Varisu..!! நினைத்ததை முடித்த ரெட் ஜெயன்ட்..!! உதயநிதி மீது உச்சகட்ட கோபத்தில் விஜய்..!!

Sun Dec 18 , 2022
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இன்றைய கோலிவுட் சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான அத்தனை ஹிட் படங்களும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடையது தான். பல கோடி கணக்கில் படங்கள் வசூல் செய்கின்றன. இந்நிறுவனத்தை தேடி சென்று படங்களை விற்பதாக ஒரு பொது மேடையில் உதயநிதியே தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் ரெட் ஜெயன்ட் நிறுவனம், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வாங்கியது. […]
நினைத்ததை முடித்த ரெட் ஜெயன்ட்..!! உதயநிதி மீது உச்சகட்ட கோபத்தில் விஜய்..!!

You May Like