fbpx

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை..!! சர்ச்சைக்குள்ளான அதிசய கேட்ச்..!! இது அவுட்டா..? சிக்ஸரா..? உண்மை இதுதான்..!!

டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக் தொடரில் 225 ரன்களை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ், 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியிடம் போராடி தோற்றது. இந்தப் போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ், சிட்னி தண்டர்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரரான ஜோஷ் பிரௌன் மற்றும் நேதன் மெக்ஸ்வீனி ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி வானவேடிக்கை நிகழ்த்தினர். பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்ட ஜோஷ் பிரௌன் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்தார். மற்றொரு பக்கம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மெக்ஸ்வீனி, 51 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 224 ரன்களை சேர்த்தது பிரிஸ்பேன் ஹீட் அணி. இதனைத் தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ், 20 ஓவரில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை..!! சர்ச்சைக்குள்ளான அதிசய கேட்ச்..!! இது அவுட்டா..? சிக்ஸரா..? உண்மை இதுதான்..!!

சர்ச்சையான அவுட்..!

ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஜோர்தன் சில்க் ஆட்டமிழந்தார். அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். 19-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய அவர் இரண்டாவது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். பந்தும் கிட்டத்தட்ட எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று விட்டது. அப்போது எல்லைக் கோட்டில் நின்று கொண்டிருந்த நெஸர் அங்கே ஒரு மேஜிக் செய்தார். பறந்து பந்தை பிடித்த அவர் பேலன்ஸ் தாங்க முடியாமல் எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்றுவிட்டார். ஆனால், பந்தினை மேலே தூக்கி வீசினார். எல்லைக்கோட்டிற்கு வெளியே இருந்து பந்தை தரையில் கால் படாமல் தாவிபிடித்து மீண்டும் பந்தினை கோட்டிற்கு உள்ளே வீசினார். பின்பு அவரும் உள்ளே வந்து பந்தினை பிடித்தார். நீண்ட நேரம் இதனை மூன்றாம் நடுவர்கள் சோதனையிட்டு அவுட் கொடுத்தனர். இருப்பினும் இது அவுட்டா? அவுட் இல்லையா என சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

Chella

Next Post

ஃபிக்சட் டெபாசிட் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை..!! இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Mon Jan 2 , 2023
நாட்டில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே, நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். வங்கிகளின் வட்டி விகிதம்..!! HDFC வட்டி – […]

You May Like