fbpx

”இதோ வந்துட்டேன்”..!! குதூகலத்தில் விராட் கோலி..!! அசந்துப்போன டிராவிட்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டியின் போது பெவிலியன் திரும்பிய விராட் கோலி தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த போது சாப்பாடு வந்துவிட்டதாக ஒருவர் வந்து சொல்ல உடனே குதூகலமாகியிருக்கிறார் விராட். இந்த நிகழ்வின் வெறும் 8 நொடிகள் கொண்ட வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியின் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று சோலே பட்டுரே. சோலா பூரி என்றும் கூறுவார்கள். விராட்டும் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால் சோலே பட்டுரேவை பிடிக்காமல் போக வாய்ப்பிருக்காது.

இந்நிலையில்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய விராட், டிராவிடிடம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்த போது உணவு பார்சலுடன் வந்தவர், சாப்பாடு வந்துவிட்டது எனச் சொல்ல ஒரு நொடி பேச்சை நிறுத்திவிட்டு கையை தட்டி வந்துட்றேன் என விராட் கூறுவதும், அதனை அருகே இருந்த டிராவிட் பார்த்து சிரிக்கும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Chella

Next Post

பகாசூரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்….!

Sun Feb 19 , 2023
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும், சமீப காலமாக நல்ல நடிகர் எனவும் பெயர் எடுத்து வருபவர் செல்வராகவன்.இவருடைய நடிப்பில் கடந்த 17ஆம் தேதியில் வெளியான திரைப்படம் தான் மகாசூரன் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தில் நட்டி நடராஜ், ராதாரவி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். முதல் நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த வரவேற்பு குறைய தொடங்கி […]

You May Like