’பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நிச்சயம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும்’ என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 23ஆம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளுக்கும் தொடரில் இதுவே முதல் போட்டியாக அமைந்துள்ளது. இந்நிலையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நிச்சயம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும்’ என ஆணித்தரமாக கூறுகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா.
![’இதை செய்தால் நிச்சயம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும்’..!! சொல்கிறார் சுரேஷ் ரெய்னா](https://1newsnation.com/wp-content/uploads/2021/01/130109-raina122.png)
ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ’இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தினால் நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும். முதல் போட்டியில் வெற்றி பெற்றால், அது நமக்கு நல்ல உத்வேகம் கொடுக்கும். நாட்டில் உள்ள அனைவரும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். விராட் கோலி மிகவும் நன்றாக இருக்கிறார். ரோகித் சர்மா மிகச் சிறந்த கேப்டன்.
![’இதை செய்தால் நிச்சயம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும்’..!! சொல்கிறார் சுரேஷ் ரெய்னா](https://1newsnation.com/wp-content/uploads/2020/12/raina-hotel_202012533088.jpg)
அதேபோல் இந்திய அணியிடம் தற்போது சூரியகுமார் யாதவ், அர்ஷதீப் சிங் இருவரும் இருக்கின்றனர். இருவரும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இந்திய அணியில் ஜடேஜா மற்றும் பும்ரா இருவருக்கும் நிகரான வீரரே கிடையாது. இருவரையும் வெளியில் அமர்த்தி விட்டு சரியான மாற்றுவீரரை உங்களால் தேர்வு செய்ய முடியாது. தற்போது உங்கள் கையில் இருக்கும் முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகிய மூவரில் ஷமி சரியான வீரராகவும் சிறந்த தேர்வாகவும் இருக்கலாம். ஆனால், அவர் பும்ராவிற்கு ஒருபோதும் மாற்றாக வர இயலாது.
![’இதை செய்தால் நிச்சயம் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும்’..!! சொல்கிறார் சுரேஷ் ரெய்னா](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/Bumrah-1-1-1024x585.jpg)
எனினும் ஷமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல ஃபார்மில் உள்ளார். தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரிஷப் பண்டின் இருப்பு அணிக்கு முக்கியமானதாக இருக்கும். 2007இல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடினார் என்பதை பார்த்தோம். அதே தொடரில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்தார். பின்னர் 2011 உலகக் கோப்பையில் இருவரும் பெரிய பங்கு வகித்தனர். எனவே, இடது கை பேட்டராக இருப்பது உங்களுக்கு அந்த நன்மையை அளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். ரிஷப் பண்ட் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்”. இவ்வாறு அவர் பேசினார்.