டி.20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 போட்டி நெதர்லாந்து இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து விளையாடி கே.எல். ராகுல் 9 ரன்களில் வெளியேறினார். ரோகித் ஷர்மா 53 ரன்கள் பெற்று ஆட்டமிழந்தார். விராட் கோலியும் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கி ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினர். இறுதியில்இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி 62 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும் எடுத்தனர். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து களமிறங்கியது. ஆனால் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற்றது. இது இந்தியாவின் 2வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.