fbpx

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி !

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது…

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளாயாடி வருகின்றது. ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி.20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றிருப்பதால் ஷிகர்தவான் தலைமையில் இந்திய அணி விளையாடி வருகின்றது.

லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் , ராஞ்சயில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருந்தன. இரு அணிகளுக்கு இடையே 3வது ஒரு நாள் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது.

போட்டியில் முதலில் இந்தியா டாஸ் வென்றது எனவே பந்துவீச்சை தேர்வு செய்தது. முதளில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. வந்தவேகத்திலேயே அனைவரும் அவுட்டாகி வெளியேறினர்.

இந்த அணியில் க்ளாசன் மட்டும் 34 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து துவக் கஆட்டக்காரர் மலன் 15 ரன்கள் , ஜான்சன் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பிறர் சொற்ப ரன்களை எடுத்தனர்.

27.1 ஓவர்களின் அனைத்து விக்கெட்டையும் இழந்து 99 ரன்களை எடுத்து பேட்டிங்கை முடித்துக் கொண்டு இந்திய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தனர். பின்னர் இந்தியா களமிறங்கியது.. 100 ரன்கள் எடுத்தால் போதும் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளாசத் தொடங்கியது. கேப்டன் ஷிகர் தவான், சுப்மான் கில் முதலில் விளையாடினர். 14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த தவான் அவுட்டானார். சுப்மான் கில்லுடன் 18 பந்துகளில் 2 பவுண்டரிகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சுப்மான் கில் 49 ரன்கள் எடுத்து அவுட்டானதால் அரை சதத்தைதவறவிட்டார். 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தார் சஞஙசு சாம்சன் … ஸ்ரயாஸ் ஐயர் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை நிலைநாட்டினார். 19.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 105 ரன்களை வெகு லேசாக எடுத்து வெற்றி பெற்றனர். 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் அடித்த சிக்சரால் வெற்றி நிலைநாட்டப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

அட !அட! அட! என்ன அழகு… ’பாரதிகண்ணம்மா ’ ஹேமா .. குந்தவையாக மாறி ஆடிய ஆட்டம்…

Tue Oct 11 , 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் வரும் ஹேமா குட்டி குந்தவையாக மாறி எவ்வளோ , க்யூட்டா ஆடுறாங்க … விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் தொடர்களில் பாரதிக்கண்ணம்மாவும் ஒன்று. இதில் ஹோமாவும் , லட்சுமியும் ரொம்ப அழகா நடித்து அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவகையில் முகபாவனைகளை காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். சமீபத்தில் யூ டியூபில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராட்சஸ மாமனே பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். […]

You May Like