இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில் அது குறித்த சில தகவல்கள் வைரலாகி வருகின்றது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டின் நடந்து முடிந்த போட்டியில் இந்தியா அரையிறுதியில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்திய கேப்டனை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் இந்த கோரிக்கை வழிமொழிந்தனர்.
இந்நிலையில் ஹர்திக்கை அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றது. ஹர்திக் இளம் வீரராக இருப்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு அணியை தலைமை தாங்குவார் என பலரும் கூறி வருகின்றனர்.
ஒவ்வொரு உலக கோப்பை முடிந்த பின்னரும் அடுத்த ஆண்டுக்கான திட்ட விதிமுறைகளை பி.சி.சி.ஐ.வகுக்கும். திடீரென விராட்கோலி பதவி விலகியதால் அடுத்த கேப்டனாக ரோகித் ஷர்மா பொறுப்பேற்றார். 2023ல் நடைபெற உள்ள 50 ஓவர் போட்டிக்கு பின்னர் ரோகித் கேப்டனாக இருக்க மாட்டார். நவம்பர் 18ம் தேதி நியூசிலாந்து டி20 தொடர் தொடங்க உள்ளது. இதற்கு பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே ராகுல், ஹர்திக் பாண்டியா, பண்ட் ஆகிய மூவரில் இருந்து ஒருவரை அடுத்த கேப்டனாக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.