fbpx

சூர்யகுமார் – கோலி கூட்டணியின் மிரட்டல் அடி..!! பணிந்தது ஆஸ்திரேலியா..! வென்றது இந்தியா..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை அதிரடி ஆட்டத்தால் தன் வசப்படுத்திக் கொண்டது இந்திய அணி.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கின.

சூர்யகுமார் - கோலி கூட்டணியின் மிரட்டல் அடி..!! பணிந்தது ஆஸ்திரேலியா..! வென்றது இந்தியா..!!

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 52 ரன்களும், டிம் டேவிட் 54 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் எதுவும் எடுக்காமல் 4 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

சூர்யகுமார் - கோலி கூட்டணியின் மிரட்டல் அடி..!! பணிந்தது ஆஸ்திரேலியா..! வென்றது இந்தியா..!!

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

சூர்யகுமார் - கோலி கூட்டணியின் மிரட்டல் அடி..!! பணிந்தது ஆஸ்திரேலியா..! வென்றது இந்தியா..!!

பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி சூர்யகுமார் யாதவ் அதிரடிப் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்க, கோலி மறுபக்கம் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டு அப்பால் விரட்டிக் கொண்டிருந்தார். ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்க, இருவரும் பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்து அரைசதம் கடந்தனர். 69 ரன்களில் சூர்யகுமார் அவுட்டாக, ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார் கோலி.

Chella

Next Post

நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...! 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

Mon Sep 26 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,129 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,688 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like