fbpx

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவானுக்கு இப்படி ஒரு நிலைமையா? இது உண்மைதானாம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

சமீப நாட்களாக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முதுகு காயத்தால் ஏற்பட்ட வலியுடன் போராடி வருகிறார்.

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த புகைப்படம் துவக்கத்தில் போலியாக இருக்கக்கூடும் என நினைத்த நிலையில், இந்த புகைப்படங்கள் உண்மை என்றும் இவை மியாமி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டவை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவானுக்கு இப்படி ஒரு நிலைமையா? இது உண்மைதானாம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

சமீப நாட்களாக மைக் டைசன் முதுகு காயத்தால் ஏற்பட்ட வலியுடன் போராடி வருகிறார். நியூயார்க்கில் கையில் ஒரு குச்சி உதவியுடன் அவர் நடமாடியதும் இந்த வலியின் காரணமாகத்தான் என கூறப்படுகிறது. முதுகில் அழுத்தத்தை தரக்கூடாது என்பதற்காக தற்போது அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காயத்தின் அளவு தீவிரமானது அல்ல என்றும் வழக்கமாக ஒரு குத்துச்சண்டை வீரருக்கு ஏற்படும் தொழில் ரீதியான காயம் போன்றதுதான் இது என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவானுக்கு இப்படி ஒரு நிலைமையா? இது உண்மைதானாம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

சமீபத்தில் போட்காஸ்ட் ஒன்றில் பேசிய மைக் டைசன் தாம் தமது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தெரிவித்து அதிர்ச்சியை கிளப்பியிருந்தார். “நாம் அனைவரும் நிச்சயமாக ஒரு நாள் இறந்துவிடுவோம். நான் கண்ணாடியில் பார்க்கும்போது, என் முகத்தில் அந்த சின்னஞ்சிறு புள்ளிகளைப் பார்க்கிறேன். நான் சொல்கிறேன், ‘ஆஹா. அதாவது எனது காலாவதி தேதி நெருங்கி வருகிறது, இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிக்கிறேன்” என்று பேசினார் மைக் டைசன்.

பிரபல குத்துச்சண்டை ஜாம்பவானுக்கு இப்படி ஒரு நிலைமையா? இது உண்மைதானாம்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

56 வயதான குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தமது இறுதிக் காலம் குறித்து பேசிய சில நாட்களில் சக்கர நாற்காலியில் அவர் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குத்துச்சண்டை பிரியர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தேசிய கீதம் பாடும்போது கே.எல்.ராகுல் செய்த நெகிழ்ச்சி செயல்..! குவியும் பாராட்டு..!

Fri Aug 19 , 2022
இந்தியா-ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பு கே.எல்.ராகுல் செய்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று ஜிம்பாப்வேயில் தொடங்கியது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக வழி நடத்தினார். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கே.எல்.ராகுல், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தொடரில் பங்கேற்றார். […]
ரன் எடுக்க திணறும் கே.எல். ராகுல்..!! இதற்கு ஒரு முடிவே கிடையாதா..? கோபத்தில் ரசிகர்கள்..!!

You May Like