fbpx

டெல்லி அணிக்கு தாவும் ஜடேஜா..!! அங்கிருந்து 2 முக்கிய வீரர்களை கேட்கும் சிஎஸ்கே..!! பரபரப்பு தகவல்..!!

ஜடேஜாவை டெல்லி அணிக்கு டிரேட் செய்ய சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டார். இதனால், சென்னை அணி தொடர் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்தது. இதனையடுத்து, தொடரின் பாதியில் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக தோனியே நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காயம் காரணமாக தொடரில் இருந்து அவர் விலகியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சென்னை அணி நிர்வாகம் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார்போல் சென்னை அணியுடன் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கிய ஜடேஜா, வரும் சீசனில் வேறு அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தன. இதனால் ரெய்னா போல இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

டெல்லி அணிக்கு தாவும் ஜடேஜா..!! அங்கிருந்து 2 முக்கிய வீரர்களை கேட்கும் சிஎஸ்கே..!! பரபரப்பு தகவல்..!!

2023 சீசனுக்காக மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. அதற்கு முன்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் வெளியிட விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் தேவைப்படும் வீரர்களை மற்ற அணிகளுடன் பேசி வாங்குவதற்கான ட்ரேடிங் விண்டோ முறையை ஐபிஎல் நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. அதில், 2023 சீசனில் தங்களது அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாட ஜடேஜாவை கொடுக்குமாறு டெல்லி அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை அணி ஜடேஜாவை கொடுத்துவிட்டு டெல்லி அணியில் உள்ள ஷர்துல் தாகூர் மற்றும் அக்சர் பட்டேல் உள்ளிட்ட இருவரை சென்னை அணிக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது ஒரு செய்தி இணையத்தில் பரவி வருவதால் சென்னை அணி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

Chella

Next Post

’’ஆளுனருக்கு ஒன்றுமே தெரியவில்லை’’ சீமான் கடும் காட்டம்…!!

Sun Oct 30 , 2022
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது பிறந்த நாளை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ’’ நாட்டில் ஒரே மதம் , ஒரே மொழி என்று கொண்டு வருவதற்கான திட்டங்கள் நடைபெறுகின்றன. இதை நாம் அனுமதிக்க முடியாது. இது பல மொழிகள் பேசக்கூடிய, பல தேசிய இனங்கள் வாழக்கூடிய ஒன்றியம். இதை […]
’வேங்கைவயல் விவகாரம்’..!! ’நான் முதல்வராக இருந்திருந்தால்’..!! கொந்தளித்த சீமான்..!!

You May Like