fbpx

கடைசி நேரத்தில் வாண வேடிக்கை காட்டிய நஜிபுல்லா..! வங்கதேசத்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான்..!

கடைசி நேரத்தில் சிக்ஸர் மழையை பொழிந்து வங்கதேசம் அணியை சாய்த்தது ஆப்கானிஸ்தான்.

ஆசியக் கோப்பையின் நேற்றைய போட்டியில் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது நைம், அனாமுல் ஹக் ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் முஜீப் உர் ரகுமான். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஷகிப் அல் ஹசனையும் வெறும் 11 ரன்கள் எடுத்த நிலையில், க்ளீன் போல்டாக்கினார் முஜிப் உர் ரகுமான். இதையடுத்து, ரஷித் கான் தனது அதிரடி வேட்டையை துவக்கினார். முஷ்பிகுர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லாஹ் ஆகிய மூவரையும் ரஷித் கான் வரிசையாக பெவிலியன் அனுப்பி வைக்க பரிதாப நிலைக்குச் சென்றது வங்கதேசம்.

கடைசி நேரத்தில் வாண வேடிக்கை காட்டிய நஜிபுல்லா..! வங்கதேசத்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான்..!

இறுதியாக மொசாடெக் ஹொசைன் நிலைத்து நின்று 4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 48 ரன்களைக் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை குவித்தது வங்கதேசம். 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் துவக்கம் முதலே நிதானமாக விளையாடத் துவங்கியது. ஆப்கன் அணியின் ஓப்பனர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களில் நடையைக் கட்ட, மற்றொரு ஓப்பனர் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 23 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முகமது நபி 21 ரன்களில் அவுட்டாக 13 ஓவர்கள் முடிவில் 62-3 என்ற நிலையில் தடுமாறத் துவங்கியது. 15 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்களை எடுத்தது.

கடைசி நேரத்தில் வாண வேடிக்கை காட்டிய நஜிபுல்லா..! வங்கதேசத்தை பந்தாடிய ஆப்கானிஸ்தான்..!

கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இப்ராகிம் சத்ரன் மற்றும் நஜிபுல்லா சத்ரன் ஆகிய இருவரும் களத்தில் தோல்வியை போராடுவார்கள் என்றே தோன்றியது. ஆனால், அடுத்த 3 ஓவர்களில் இருவரும் மேஜிக் செய்தார்கள். சிக்ஸர், பவுண்டரி மழையை பொழிந்தனர். ஒவ்வொரு ஓவரில் சிக்ஸர்கள் பறக்கவிட்டார் நஜிபுல்லா. இதனால், 18.3 ஓவர்களிலேயே 131 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இப்ராஹிம் ஸத்ரான் 41 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 42 ரன்களும், நஜிபுல்லா ஸத்ரான் 17 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட 43 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 69 ரன்களுக்கு பார்ட்னர் ஷிப் அமைத்தது. ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Chella

Next Post

விவசாயிகளே கவனிங்க.. இதை செய்ய இன்றே கடைசி நாள்.. இல்லையெனில் ரூ.6000 கிடைக்காது.

Wed Aug 31 , 2022
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு […]

You May Like