fbpx

பழைய ரெக்கார்டை ஓரங்கட்டிய நீரஜ் சோப்ரா..! டயமண்ட் லீக்கில் புதிய சாதனை..!

லூசேன் டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்நிலையில், நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தப் போட்டியின் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்ததாக ஷூரிச்சில் செப்டம்பர் 7, 8ஆம் தேதிகளில் நடக்கும் இறுதிச் சுற்றில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.

பழைய ரெக்கார்டை ஓரங்கட்டிய நீரஜ் சோப்ரா..! டயமண்ட் லீக்கில் புதிய சாதனை..!

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச் சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். அமெரிக்காவில் நடந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

Chella

Next Post

அடுத்த ஆபத்து.. குழந்தைகளை அதிகமாக தாக்கும் நோய்த்தொற்று.. என்னென்ன அறிகுறிகள்..?

Sat Aug 27 , 2022
குழந்தைகளில் அடிக்கடி ஏற்படும் ஒரு லேசான வைரஸ் தொற்று கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, foot and mouth disease) ஆகும். காக்ஸாக்கி வைரஸ் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது.. குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பல குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை இல்லை. உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலமும், […]

You May Like