fbpx

ஐபிஎல்-க்கு வந்த புதிய ஆப்பு..!! கூண்டோடு வெளியேறும் வீரர்கள்..!! திக்குமுக்காடும் பிசிசிஐ..!!

ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அண்மையில் நடைபெற்றது. கடந்த முறை சொதப்பிய சென்னை, மும்பை அணிகள் இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய உத்வேகத்துடன் களமிறங்குகிறார்கள். இம்முறை ஐபிஎல் தொடர் மிகவும் பிரம்மாண்டமாக பழைய முறைப்படி அனைத்து நகரங்களிலும் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல்-க்கு வந்த புதிய ஆப்பு..!! கூண்டோடு வெளியேறும் வீரர்கள்..!! திக்குமுக்காடும் பிசிசிஐ..!!

ஐபிஎல் தொடர் மே 28ஆம் தேதி முடிவடையும் நிலையில், அடுத்த 10 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏறக்குறைய தகுதி பெற்றுள்ள நிலையில், 2-வது அணியாக இந்தியா முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்களை பிளே ஆஃப் சுற்றின் போது இங்கிலாந்து திரும்பும் படி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மே 20ஆம் தேதி ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் இல்லை என்றால் அது ஐபிஎல் முடிவுகளை பாதிக்கக்கூடும். பிரச்சனை இதோடு நிற்கவில்லை. ஆஸ்திரேலிய தங்களது வீரர்களை அழைக்கும் மாதிரியே இந்திய அணி வீரர்களும் பிளே ஆப் சுற்றிலிருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனென்றால் ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்று 10 ஆண்டுகள் ஆகிறது.

அதனை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ஐபிஎல்-ஐ வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என பிசிசிஐ உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால், விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஜடேஜா முஹம்மது சிராஜ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரை விட்டு விலக வாய்ப்பு இருக்கிறது. இப்படி முக்கிய வீரர்கள் அனைவரும் விலகினால் ஐபிஎல் புகழ் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கடுப்பான ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு வீரர்கள் உட்பட யாரையும் ஐபிஎல் தொடர் முடியும் வரை அனுப்பக்கூடாது என பிசிசிஐக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ முழித்து வருகிறது. இந்திய வீரர்களை அனுப்பும் முடிவிலிருந்து பின்வாங்கி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. ஆனால், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் முக்கியம் என்பதால் அதனை ஒரு வாரம் பின்னுக்கு தள்ளிவிடலாமா? இல்லை ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு முன்பாகவே முடித்து விடலாமா என்ற யோசனையில் பிசிசிஐ இருக்கிறது. இதற்கிடையே, நியூசிலாந்தும், இங்கிலாந்தும் ஜூன் முதல் வாரத்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறார்கள். இதனால் இரு அணி வீரர்களும் ஐபிஎல் தொடரின் கடைசி வாரத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.

Chella

Next Post

கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டிக்கு கோடிகளில் குவிந்த பரிசுப் பொருட்கள்..!! கோலி, தோனி என்ன செய்தார்கள் தெரியுமா..?

Thu Jan 26 , 2023
கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி தம்பதியினருக்கு பிரபலங்கள் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுலுக்கு, அவருடைய காதலியும் பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கே.எல். ராகுல் மற்றும் அதியா செட்டியின் குடும்ப […]
கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டிக்கு கோடிகளில் குவிந்த பரிசுப் பொருட்கள்..!! கோலி, தோனி என்ன செய்தார்கள் தெரியுமா..?

You May Like