உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் குகேஷ்.
செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களில் ஒன்றான AIM செஸ் ரேபிட் தொடர் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது சுற்று போட்டிகளில் தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் குகேஷ் தன்னுடைய 29-வது நகர்த்தலில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஏற்கனவே இந்த தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான அர்ஜுன் எரிகாசி, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், மீண்டும் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றிருக்கிறார்.
மேக்னஸ் கார்ல்சனை செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களில் வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையையும் குகேஷ் இதன் மூலம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனை பிரக்ஞானந்தாவிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.