fbpx

’என்னை எப்படியாவது போட்டிக்கு தயார்படுத்துங்கள்’..! மருத்துவரிடம் கூறிய சூர்யகுமார் யாதவ்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், தனக்கு மருந்து கொடுங்கள் இல்லை… ஊசிபோடுங்கள்… ஆனால், என்னை எப்படியாவது போட்டியில் ஆடுமளவிற்கு தயார்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 187 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசி 36 பந்துகளில் 69 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. மேலும் ஆட்ட நாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கும், தொடர் நாயகன் விருது அக்சர் பட்டேலுக்கும் வழங்கப்பட்டது.

’என்னை எப்படியாவது போட்டிக்கு தயார்படுத்துங்கள்’..! மருத்துவரிடம் கூறிய சூர்யகுமார் யாதவ்..!

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் அக்சர் பட்டேல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் கலந்துரையாடினர். அப்போது சூர்யகுமாரிடம் பிசியோ அறையில் உங்களைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றும், அதிகாலை 3 மணிக்கு ஏன் எழுந்தீர்கள் என்றும் அக்சர் பட்டேல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சூரியகுமார் யாதவ், ”நேற்றிரவு போட்டிக்கு முன் எனக்கு வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது நான் எனது மருத்துவர் மற்றும் பிசியோவிடம் சொன்னேன், உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தால் நான் எப்படி நடந்துகொள்வேன்? என்னால் உடம்பு சரியில்லாமல் இருக்க முடியாது. அதனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எனக்கு மருந்து அல்லது ஊசி போடுங்கள், ஆனால் மாலை போட்டிக்கு என்னை தயார்படுத்துங்கள் “ என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ஜெர்சியில் நான் ஒருமுறை மைதானத்திற்கு வந்தவுடன், எனக்கு வித்தியாசமான உணர்ச்சி இருக்கிறது என்றும் கூறினார்.

Chella

Next Post

ரஷ்யாவில் உள்ள பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு... 6 பேர் பலி.. 20 பேர் காயம்..

Mon Sep 26 , 2022
ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துடன், 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உட்முர்டியா (Udmurtia) என்ற மாகாணத்தில் தலைநகரான Izhevsk என்ற இடத்தில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த காவலாளி ஒருவரையும், சில குழந்தைகளையும் கொன்றதாக […]

You May Like