fbpx

சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டம் ரோகித் சர்மாவுக்கு 400-வது டி20 போட்டி ஆகும்.

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் 400 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா. அதிக டி20 ஆட்டங்களை விளையாடிய இந்திய வீரர்களின் வரிசையில் ரோகித் சர்மா ஏற்கனவே முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது அவர் 400 டி20 போட்டிகள் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் 350 போட்டிகளுக்கு மேல் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் ரோகித் சர்மா (400), தினேஷ் கார்த்திக் (368), விராட் கோலி (353) மற்றும் தோனி (361) ஆகியோர் மட்டுமே உள்ளனர். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மா சமீபத்தில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

சர்வதேச அளவில் அதிக டி20 ஆட்டங்களை விளையாடிய வீரர்களின் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் கீரோன் பொல்லார்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 614 டி20 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிராவோ 556 போட்டிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷோயப் மாலிக் 481 போட்டிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Chella

Next Post

’இனி சூர்யகுமார் யாதவ் விளையாடப் போவதில்லை’..!! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரோகித் சர்மா..!!

Mon Oct 3 , 2022
தென்னாப்ரிக்கா அணி உடனான 2-வது டி20 போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசிய விஷயம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தென்னாப்ரிக்காவுடனான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் குறித்து ரோகித் சர்மா கூறுகையில், ”சூர்யகுமார் யாதவை இனி விளையாட வைக்க வேண்டாம் என யோசித்து வருகிறேன். அடுத்து வரும் எந்த போட்டிகளிலும் அவரை விளையாட வைக்காமல் நேரடியாக அக்.23ஆம் தேதி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு […]
டி20 உலகக்கோப்பை..!! எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி..!! இன்று பலப்பரீட்சை..!!

You May Like