fbpx

பந்துகளை தெறிக்கவிட்ட ரோகித்..!! ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்து அசத்தல்..!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹோல்கர் மைதானத்தில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ரோகித், கில் சதம் 4-வது ஓவருக்கு பிறகு அதிரடி வேட்டையை ஆரம்பித்த ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டனர். பெர்குசனின் ஒரே ஓவரில் சுப்மன் கில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். ரோகித் சர்மா தனது பங்குக்கு ஜேக்கப் டப்பி, சான்ட்னெரின் ஓவர்களில் இரு சிக்சர் வீதம் பறக்கவிட்டு பிரமாதப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது.

அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது 30-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். அதே ஓவரில் சுப்மன் கில் பவுண்டரி அடித்து 72 பந்துகளில் சதம் அடித்தார். தனது 21வது ஒரு நாள் போட்டியில் ஆடும் அவருக்கு இது 4வது சதமாகும். இந்த தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை முழுவதுமாக கைப்பற்றியது.

Chella

Next Post

அசத்தும் மத்திய அரசு...! இந்தியாவில் மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பல் தொடக்கம்...!

Wed Jan 25 , 2023
பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் கலந்த எரிப்பொருளாகும். […]

You May Like