fbpx

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, முதன்முதலில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி லக்னோவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

மழையின் காரணமாக ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் சீரான தொடக்கத்தை கொடுத்தனர். நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்த டிகாக் 48 ரன்களில் நடையை கட்டினார். 110க்கு 4 விக்கெட்டுகள் இருந்த போது 5-வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். கடைசிவரை நிலைத்து நின்று ஆடியவர்கள் 40 ஓவர் முடிவில் அணிக்கு 249 என்ற நல்ல அணி ஸ்கோரை சேர்த்தனர்.

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

250 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள், 8 ரன்கள் இருந்த போது அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். விக்கெட் சரிவை சரிகட்ட முயன்ற ருதுராஜ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் சீரான ரன்களை கொடுத்தாலும், அணி 48 ரன்கள் எடுத்திருந்த போது அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சிறப்பாக விளையாடி வெற்றிக்கான இலக்கை துறத்தினர். சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் விளாசி 50 ரன்களில் இங்கிடி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாகுர், சஞ்சு சாம்சன் உடன் இணைந்து நம்பிக்கை அளித்தாலும் 33 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் சஞ்சு சாம்சனுக்கு கைக்கொடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதி வரை களத்தில் நின்ற சஞ்சு சாம்சன் கடைசி ஓவரில் 6 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற இடத்தில் முதல் 3 பந்துகளில் 6, 4, 4 என அடுத்தடுத்து ரன்கள் விளாசி தென்னாப்பிரிக்காவுக்கு பயத்தை கொடுத்தார். 4-வது பந்தை டாட்டாக வீசிய ஷாம்சி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை வீழ்த்தியது. கடைசிவரை அணியின் வெற்றிக்காக போராடிய சஞ்சு சாம்சன் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

ஆட்டத்தில் 37-வது ஓவர் வரை இந்திய அணிக்காக வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் அதாவது 18 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. கிட்டதட்ட ஒரு ஓவருக்கு 15 ரன்கள். களத்தில் 62 ரன்களுடன் சஞ்சு சாம்சனும், 33 ரன்களுடன் ஷர்துல் தாக்கூரும் இருந்தனர். ஆனால், அடுத்த இரண்டு ஓவர்களில் கதையே மாறிவிட்டது. 38வது ஓவரில் முதல் பந்தில் ஒரு பவுண்டரியும் அடுத்த பந்தில் ஒரு சிங்கிளும் சஞ்சு சாம்சன் எடுத்தார். அவர் அடுத்த 10 பந்துகளை சந்திக்கவே இல்லை. குறிப்பாக 39வது ஓவரில் அவர் ஒரு பந்துகூட சந்திக்கவில்லை. 38வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு விக்கெட் வீழ்ந்தது. 39வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஒரு விக்கெட் வீழ்ந்தது. இதனால், கடைசி ஓவரில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. கடைசி வரை போராடி இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றார் சஞ்சு சாம்சன். 51 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு ஒரு வகையில் இது கௌரவமான தோல்விதான்.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே இனி இதை எல்லாம் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்...! மத்திய போக்குவரத்து துறை அறிவிப்பு...!

Fri Oct 7 , 2022
இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022-ஐ மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் 02.09.2022 அன்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் வாகனங்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது இந்த விதிமுறைகள் பொருந்தும். இந்த விதிமுறைகளின்படி, நாட்டில் தங்கியிருக்கும் போது செல்லுபடியாக கூடிய பதிவுச் சான்றிதழ், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு வாகனம், மாசுக்கட்டுப்பாட்டு […]

You May Like