fbpx

செம மாஸ்..! மீண்டும் தரமான கம்பேக் கொடுத்த கோலி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக விராட்கோலி சதமடித்து தனது கம்பேக்கை அளித்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய கடைசி சூப்பர் 4 போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முன்னாள் கேப்டன் விராட்கோலி சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். சர்வதேச போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக கடைசியாக 2019ஆம் ஆண்டு சதமடித்திருந்த விராட் கோலி, சரியாக 1021 நாட்களுக்கு பிறகு மீண்டும் சதமடித்துள்ளார். விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 212 ரன்களை குவிக்க முடிந்தது.

செம மாஸ்..! மீண்டும் தரமான கம்பேக் கொடுத்த கோலி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் விராட் கோலி சதமடித்திருப்பது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட்கோலி கடைசியாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 22 – 26ஆம் தேதியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதமடித்திருந்தார். அந்த டெஸ்ட் போட்டியில் 136 ரன்கள் அடித்த விராட்கோலி அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எந்தவொரு சதத்தையும் அடிக்காமலே இருந்தார்.

செம மாஸ்..! மீண்டும் தரமான கம்பேக் கொடுத்த கோலி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

2020ஆம் ஆண்டு கொரோனாவால் முடங்கிய நிலையில், 2021ஆம் ஆண்டு பாதி நாட்களும் கொரோனாவால் முடங்கியது. இந்த காலகட்டத்தில் பயோ பபுள்களுக்கு இடையே இந்திய அணி ஆடிய போட்டிகளில் விராட் கோலி சதமடிக்காதது அவரது ரசிகர்களை சோர்வடைய செய்தது. சதங்களின் நாயகன் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விராட்கோலி சதமடிக்காதது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

செம மாஸ்..! மீண்டும் தரமான கம்பேக் கொடுத்த கோலி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட்கோலி அடித்த சதம் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணிக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சதங்களை விராட்கோலி விளாசியிருந்தாலும், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக சதமடிக்கவில்லை என்ற ஏக்கத்தை தற்போது விராட்கோலி தீர்த்து வைத்துள்ளார். இந்திய அணிக்காக டி20 போட்டியில் முதல் சதத்தை விளாசிய விராட்கோலி, ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் தனது 71-வது சதத்தை பதிவு செய்துள்ளார். விராட்கோலி மீண்டும் தனது சதங்கள் பயணத்தை தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக விராட்கோலி சதமடித்து தனது கம்பேக்கை அளித்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு...! மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய தகவல்..‌.!

Fri Sep 9 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 6,093 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 31 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,614 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
”நாம் நினைக்கும் அளவுக்கு இது சிறிய விஷயம் கிடையாது”..! கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!

You May Like