fbpx

4 முறை ஒலிம்பிக்கில் வெற்றி ……39 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் …..அடுத்தடுத்து சாதனைகள் ….சாதிக்க வயது தடையில்லை என நிரூபித்த செரீனா …

ஒலிம்பிக் போட்டிகளில் டென்னிசில் ஜாம்பவனாக வலம் வந்த செரீனா வில்லியம்ஸ் சாதிக்க வயது தடையில்லை என்பதை கூறாமல் கூறி டென்னிசில் இருந்து பிரியாவிடைபெற்றுச் சென்றிருக்கின்றார்.

அமெரிக்காவின் மிசிங்கன் மாகாணத்தில் 1981ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி ரிச்சர்ட் – ஒரிசீனா என்பவருக்கு மகளாக பிறந்தார். இவரின் பெற்றோர்கள் தான் செரீனாவுக்கு  டென்னிஸ் விளையாட்டின் குரு.  இவரின் தந்தைதான் செரீனாவுக்கு முதன் முதலில் டென்னிஸ் கற்றுக் கொடுத்துள்ளார். 4 வயதில் டென்னிஸ் மட்டையை கையிலெடுத்து விலாசத் தொடங்கினார்  செரீனா.

கருப்பினத்தவர் என ஒதுக்கப்பட்ட செரீனா

அவரின் தந்தை வழிகாட்டுதலால் விளையாட்டில் கால் பதித்த இவர் கருப்பினத்தவர் என்பதால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டார்.

இதை தனக்கு சாதகமாகவே எடுத்துக் கொண்ட செரீனா , ஒரு நாள் இந்த உலகத்தின் பார்வையே என்மீது விழும் என்ற லட்சியத்தைக் கொண்டார். அன்றில் இருந்து தொடர்ந்து கடுமையான பயிற்சி செய்து வந்தார். இவரின் திறமையை மேலும் வளர்க்க எண்ணி அவரது தந்தை அவரை ரிக்மாசி எனப்படும் ஒரு பிரபல டென்னிஸ் பயிற்றுனரிடம் அழைத்துச் செல்கின்றார்.

இதனிடையே இவரது சகோதரி வீனசுக்கும் இதில் ஆர்வம் ஏற்படுகின்றது. இருவரும் இணைந்து இதில் சாதிக்க வேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்குகின்றனர். 1991ம் ஆண்டு இவருக்கு பத்து வயது இருக்கும் போது நடந்த போட்டியில் பங்கேற்கின்றார். இதில் 46 விளையாட்டுகளில் 43 விளையாட்டுக்களில் வெற்றி வாகை சூடினார்.

தனி இடத்தை தக்க வைத்த செரீனா

தொடர்ந்து சாதனைகளை நிலைநாட்டி வந்த செரீனா, 2002ம் ஆண்டு உலகிலேயே முதலிடத்தை பிடித்தார் . அடுத்தடுத்து பல வெற்றிகளைக் குவித்தார். இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் , மகளிர் இரட்டையர் பிரிவில் 14 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார். 2003-ல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் சரியாக விளையாடமுடியவில்லை. இதனால் முதல் இடத்தில் இருந்தவர் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் தனக்கென உள்ள பாணியில் விளையாடி எண்ணற்ற ரசிர்களை கவர்ந்தார். இவர் மட்டையால் பந்தை விலாசும் ஸ்டைல் என இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியது.

during day fourteen of French Open at Roland Garros on June 8, 2013 in Paris, France.

பிரியாவிடை

டென்னிஸ் உலகில் பல சாதனைகளை படைத்த செரீனாவுக்கு வயது 40 ஆகின்றது. ஒரு குழந்தை பிறந்த பின்னரும் சாதிக்க வயதோ, குழந்தையோ தடையாக இருக்க முடியாது என்பதை உணர்த்தி உள்ளார். இன்னிலையில் அமெரிக்காவில் நடந்து வரும் ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து ரசிகர்களின் ஆரவாரத்துடன் நேற்று கண்ணீருடன் பிரியாவிடை பெற்றுச் சென்றார்.

Next Post

சென்னையில் தொழிலதிபர் கொடூரக் கொலை …. பாலித்தீன் பையில் சுற்றி வீசிச் சென்ற கொலையாளிகள் …. வெளியில் நடமாடவே மக்கள் அச்சம்

Sat Sep 3 , 2022
சென்னையில் தொழிலதிபரை கொடூரமாகக் கொலை செய்த கும்பல் சாலை ஓரத்தில் பிளாஸ்டி பையால் சுற்றி தூக்கி வீசிச் சென்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை சின்மயா நகர் பகுதியில் நெற்குன்றம் சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் பை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இதை அகற்ற சென்ற துப்புரவு பணியாளர்கள் சடலம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பையை […]

You May Like