fbpx

’ஆப்கானிஸ்தான் வீரரின் காலை உடைத்த ஷாஹின் அப்ரிடி’..!! இந்திய அணிக்கு எச்சரிக்கையா..?

ஆப்கானிஸ்தான் அணியின் ஓபனிங் பிளேயர் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷாஹின் அப்ரிடி வீசிய பந்தில் விக்கெட்டை இழந்து கடைசியில் ஒரு மாற்று வீரரின் உதவியால் மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாய் இருந்தது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடியின் வருகைதான். முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக ஓய்வில் வைக்கப்பட்டார். பும்ராவை போன்றே அவரும் இந்த உலககோப்பையை விட்டுவிடுவாரோ என்ற கவலை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகமாய் இருந்து வந்தது.

’ஆப்கானிஸ்தான் வீரரின் காலை உடைத்த ஷாஹின் அப்ரிடி’..!! இந்திய அணிக்கு எச்சரிக்கையா..?

இந்நிலையில், கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பங்குபெற்று ஆடினார். அந்த போட்டியில் அப்ரிடி 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். ஆனால், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இருப்பினும் நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில், ஷாஹீன் பங்குபெற்று ஆடினார். இந்த போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் ஓபனர் ரஹமனுல்லா குர்பாஸ் விக்கெட்டை வீழ்த்தி சிறந்த தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஷாஹின் அப்ரிடி வீசிய அதிவேகமான யார்க்கர் பந்து, குர்பாஸ் கால்களை தாக்கி லெக்பை விக்கெட்டை பறித்தது. அப்போது ஷாஹின் வீசிய பந்தின் வேகத்தால் குர்பாஸ் இடது காலின் கால்விரல் நசுங்கியது. அவரால் வலியால் நடக்கவே முடியாமல் போனது. பின்னர் நடுவர் உத்தரவின் பேரில் குர்பாஸை பரிசோதிக்க பிசியோக்கள் வந்ததால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அவரால் தொடர்ந்து நடக்க முடியாமல் போனதால் கடைசியில் அவர் ஒரு மாற்று பீல்டரால் மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்காக குர்பாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேட்ச் முடிந்த பிறகு ஷாஹீன் அப்ரிடி குர்பாஸ்ஸை சந்தித்து காயம் குறித்து விசாரித்தார்.

https://twitter.com/KuchNahiUkhada/status/1582619781186084865?s=20&t=_er6pbgLReDPyC9xkjH5FQ

Chella

Next Post

SBI வங்கியில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்….

Thu Oct 20 , 2022
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Investigating Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் தேவை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு […]

You May Like