டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று ஆட்டங்களின் முடிவுபடி ‘குரூப் 2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முக்கியமான லீக் ஆட்டம் இன்று அடிலெய்டில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய வங்காளதேசம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே எடுத்தது. இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு முன்னேறி விடலாம் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி தனது இன்னிங்சை துவங்கியது. இறுதியில் அந்த அணி 18.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில் 4-வது அணியாக பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. அரையிறுதி சுற்றில் இந்தியா-இங்கிலாந்து, பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோத வாய்ப்பு அதிகமாக உள்ளது.