தென்னாப்ரிக்கா அணி உடனான 2-வது டி20 போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசிய விஷயம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தென்னாப்ரிக்காவுடனான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் குறித்து ரோகித் சர்மா கூறுகையில், ”சூர்யகுமார் யாதவை இனி விளையாட வைக்க வேண்டாம் என யோசித்து வருகிறேன். அடுத்து வரும் எந்த போட்டிகளிலும் அவரை விளையாட வைக்காமல் நேரடியாக அக்.23ஆம் தேதி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால், அவரை இதே போன்று மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும்” எனக் கூறினார்.
இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ”நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம் என்றவுடனே திட்டமிட்டுவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். பயிற்சியின் போதே எப்படி ஆடப்போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும். முதலில் பேட்டிங் செய்யும் போது முடிந்தவரை அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் எனது திட்டம்” எனக் கூறினார். இந்திய அணி அடுத்ததாக வரும் அக்டோபர் 4ஆம் தேதி தென்னாப்பிரிக்கா உடனான 3வது டி20இல் மோதுகிறது. இதனை தொடர்ந்து 6ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, அங்கு அக். 17 மற்றும் 19ஆம் தேதிகளில் ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.