fbpx

டி20 போட்டிகள்..!! பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனை..!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை வென்றதை அடுத்து பாகிஸ்தான் அணியின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் க்ரீன் மற்றும் இறுதியில் களமிறங்கிய டிம் டேவிட் இருவரின் அதிரடி அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது.

டி20 போட்டிகள்..!! பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனை..!!

கடினமான இலக்கை துரத்திய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் ராகுல் விக்கெட்டை விரைவாகவே பறிகொடுத்து தடுமாறினாலும், விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரின் 100 ரன்கள் பார்ட்னர்சிப்பாலும், அதிரடியாலும் மீண்டது. விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அரைசதம் அடித்து வெளியேறினர். இறுதியில் பவுண்டரி அடித்து ஹர்திக் பாண்டியா போட்டியை முடித்து வைத்தார். தொடர் 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில், தொடரின் வெற்றியை முடிவு செய்யும் கடைசிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற வீதத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.

டி20 போட்டிகள்..!! பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனை..!!

இந்நிலையில், இந்த போட்டியை வென்றதை அடுத்து, ஒரு வருடத்தில் அதிக டி20 போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. முந்தைய உலக சாதனையாக 2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி 20 டி20 போட்டிகளை வென்றிருந்தது. இந்நிலையில், வெறும் 9 மாதங்களில் இந்தியா இந்த சாதனையை முறியடித்து 21 டி20 போட்டிகளை வென்றுள்ளது.

டி20 போட்டிகள்..!! பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனை..!!

மேலும் ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இந்தியா இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளது. அங்கு குழு கட்டத்தில் இந்தியா 5 போட்டிகளில் விளையாட உள்ளது. மறுபுறம், இந்திய அணி இறுதிப் போட்டியை எட்டினால், மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் உள்ளன. உலகக் கோப்பைக்குப் பிறகு, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதனால் இந்தியா இன்னும் 12 போட்டிகளில் வீதம் விளையாட வாய்ப்பு உள்ளது. அதில், இந்திய அணி பாதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கூட இந்தியாவின் உலக சாதனையை முறியடிப்பது கடினமான ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.

Chella

Next Post

சூர்யகுமார் - கோலி கூட்டணியின் மிரட்டல் அடி..!! பணிந்தது ஆஸ்திரேலியா..! வென்றது இந்தியா..!!

Mon Sep 26 , 2022
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை அதிரடி ஆட்டத்தால் தன் வசப்படுத்திக் கொண்டது இந்திய அணி. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் வரிந்து கட்டிக் கொண்டு […]
’என்னை எப்படியாவது போட்டிக்கு தயார்படுத்துங்கள்’..! மருத்துவரிடம் கூறிய சூர்யகுமார் யாதவ்..!

You May Like