ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் அணியும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. அதனையொட்டி, மும்பையில் ரசிகர்கள் முன்னிலையில் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கவுர், ஹர்திக் பாண்டியா, ஷபாலி வர்மா, சூரியகுமார் யாதவ், ரேணுகா சிங் ஆகியோர் புதிய ஜெர்சியில் காணப்படும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் நிலையில், இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் ஆடிதான் இலங்கை அணி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும். வெஸ்ட் இண்டீஸின் நிலைமையும் இதுவே.