fbpx

டி20 உலகக்கோப்பை..!! பரபரப்பான கடைசி ஓவர்..!! சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி..!!

டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே.  

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால், வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில் 53 பந்துகளில் 82 ரன்களை குவித்தது மட்டுமில்லாமல், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் விராட் கோலி.

டி20 உலகக்கோப்பை..!! பரபரப்பான கடைசி ஓவர்..!! சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி..!!

இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் என்கிற இலக்கை கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிகரமாக விரட்டிப் பிடித்தது இந்திய அணி. இதுவே டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் விராட் கோலி 4-வது முறையாக இறுதிப்பந்து வரை களத்தில் ஆட்டமிழாக்காமல் இருந்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலியின் சராசரி 308 ஆக உயர்ந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை..!! பரபரப்பான கடைசி ஓவர்..!! சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி..!!

பரபரப்பான கடைசி ஓவர்

கடைசி ஓவரை பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் வீசினார். முதல் பந்தை சந்தித்த ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால், இந்தியா வெற்றிபெற 5 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் உருவானது. அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரின் 2-வது பந்தை சந்தித்தார். அவர் அந்த பந்தில் 1 ரன் எடுத்தார். 3-வது பந்தை சந்தித்த கோலி 2 ரன்கள் எடுத்தார். 4வது பந்தை நவாஸ் நோ-பாலாக வீச அந்த பந்தை விராட் கோலி சிக்சருக்கு விளாசினார். இதனை தொடர்ந்து ‘ஃப்ரி-ஹிட்’ முறையில் 4வது பந்தை மீண்டும் வீசும் சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் 4-வது பந்து வீச அது ஒய்ட் ஆக அறிவிக்கப்பட்டது. இதனால், மீண்டும் ஃப்ரி-ஹிட் பந்து வீச கோலி போல்ட் ஆனார். ஆனால், ஃப்ரி-ஹிட் பந்தில் அவுட் கிடையாது என்பதால் அதைப் பயன்படுத்தி கோலி 3 ரன்கள் ஓடினார்.

டி20 உலகக்கோப்பை..!! பரபரப்பான கடைசி ஓவர்..!! சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி..!!

பின்னர், 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 5வது பந்தை சந்தித்த தினேஷ் கார்த்திக் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் களமிறங்கினார். நவாஸ் வீசிய கடைசி பந்து ஒயிட் ஆக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா 159 ரன்களை எட்டி பாகிஸ்தான் அணியின் ரன்னை சமன் செய்தது. ஒயிட் வீசப்பட்டதால் கடைசி பந்து மீண்டும் வீசப்பட்டது. கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் பந்தை மிட்ஆன் திசைக்கு அஸ்வின் விளாசி 1 ரன் ஓடினார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது. அதன்படி பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றிபெற்றது.

Chella

Next Post

நாடு முழுவதும் ’படார் படார்’..!! களைகட்டும் தீபாவளி..!! புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்..!!

Mon Oct 24 , 2022
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கி தவித்த மக்கள் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி. இன்று உலகம் முழுவதும் […]

You May Like