fbpx

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்..!! இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை..!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இன்று நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள், தலா 2 பயிற்சி ஆட்டங்களை விளையாடுகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினர்.

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்..!! இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை..!

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில், முகமது ஷமி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இருப்பினும், பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் முகமது ஷமி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில், ஒரே ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, பும்ரா இல்லாத குறையை நான் தீர்த்து வைக்கிறேன் என ரசிகர்களுக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதிலளித்தார்.

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்..!! இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை..!

இந்நிலையில் இன்று பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது போல இந்த ஆட்டத்திலும் இந்திய அணி அசத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டங்களில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

Chella

Next Post

Alert..!! மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் பெங்களூரு நகரம்..? கொட்டித் தீர்க்கும் கனமழை..!!

Wed Oct 19 , 2022
பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மீண்டும் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாறு காணாத கனமழை பெய்ததால், பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீண்டும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் […]
மீண்டும் தத்தளிக்கும் பெங்களூரு..!! ஒரே இரவில் இப்படியா..? அடுத்த 3 நாட்களில் நடக்கப்போகும் பயங்கரம்..!!

You May Like