fbpx

’ஆரம்பமே சரியில்லையே’..! ஆசிய கோப்பை கிரிக்கெட்..! இந்திய அணிக்கு இப்படி ஒரு சோதனையா?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 28ஆம் தேதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

’ஆரம்பமே சரியில்லையே’..! ஆசிய கோப்பை கிரிக்கெட்..! இந்திய அணிக்கு இப்படி ஒரு சோதனையா?

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்ல மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், டிராவிட் ஆன்லைன் வாயிலாக வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவார் எனக் கூறப்படுகிறது. டிராவிட்டுக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியினருடன் இருப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் திடீரென கூடும் அமைச்சரவை..! என்ன காரணம்?

Wed Aug 24 , 2022
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் வரும் 30ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், தொழிற்கொள்கை, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் பல்வேறு […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..!! கூடுதல் இழப்பீடு..!! 4 போலீசார் பணியிடை நீக்கம்..!! முதல்வர் அதிரடி

You May Like