fbpx

விராட் கோலிக்கு பரிசளித்து நெகிழ வைத்த ஹாங்காங் அணி..! என்ன தெரியுமா..?

ஆசிய கோப்பையில் இந்தியா-ஹாங்காங் இடையேயான போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது ஹாங்காங் அணி சார்பில் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி அவருக்கு ஹாங்காங் அணி சார்பில் ஒரு ஜெர்ஸி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த ஜெர்ஸியில் சில வரிகளும் இடம்பெற்றுள்ளன. அதில், “விராட் கோலி நீங்கள் பல தலைமுறை வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதற்கு எங்களுடைய நன்றி. நாங்கள் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம். அடுத்து நிறையே நல்ல நாட்கள் உங்கள் கிரிக்கெட் பயணத்தில் இடம்பெறவுள்ளது. அன்பும் ஆதரவுடனும் ஹாங்காங் அணி” என்று எழுதப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கு பரிசளித்து நெகிழ வைத்த ஹாங்காங் அணி..! என்ன தெரியுமா?

இதை விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். அத்துடன் இது என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது என்றும் இது ஒரு இனிமையான பரிசு என்றும் கூறியுள்ளார். அத்துடன் ஹாங்காங் அணிக்கு தன்னுடைய நன்றியையும் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பான கருத்துகள் அதிகம் எழுந்து வந்தன. அந்தப் பேச்சுகளுக்கு விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தின் மூலம் தற்போது பதிலளித்து வருகிறார். பாகிஸ்தான் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஹாங்காங் போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால், அவர் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chella

Next Post

தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு..! ஆபத்தை உணராமல் இப்படியா செய்வது..?

Thu Sep 1 , 2022
மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை, மற்றும் வருஷநாடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி 4,300 கன அடி உபரி நீர் அணையில் இருந்து அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், வைகை கரையோர மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை […]
தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு..! ஆபத்தை உணராமல் இப்படியா செய்வது..?

You May Like