டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்திருக்கும் ரோகித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்து அவரை முந்திருக்கிறார் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மார்டின் கப்டில்.
உலக டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை அடித்திருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 15 ரன்களை அடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் கப்டில், ரோகித் சர்மாவை முந்தி டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் என்னும் சாதனையை படைத்துள்ளார்.
தற்போது அதிக ரன்களை அடித்திருக்கும் கப்டில் 3,497 ரன்கள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்திய வீரர் ரோகித் சர்மா 3,487 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் விராட் கோலி 3,308 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்.