fbpx

”இந்த பார்ட்னர்ஷிப்பை எப்போதும் மறக்க முடியாது”..! தோனி குறித்து எமோஷனலாக பதிவிட்ட கோலி..!

”தோனியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது” என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

”இந்த பார்ட்னர்ஷிப்பை எப்போதும் மறக்க முடியாது”..! தோனி குறித்து எமோஷனலாக பதிவிட்ட கோலி..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி கிரிக்கெட்டின் எந்த ஃபார்மெட்டிலும் அவர் சதம் விளாசவில்லை. இதனால், அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது. பிசிசிஐ சார்பில் அவருக்கு போதிய ஓய்வும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் இப்போது புத்துணர்ச்சியுடன் அணிக்கு திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்போது இந்திய அணியினருடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். எப்படியும் இம்முறை பழைய கோலியை பார்க்கலாம் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

”இந்த பார்ட்னர்ஷிப்பை எப்போதும் மறக்க முடியாது”..! தோனி குறித்து எமோஷனலாக பதிவிட்ட கோலி..!

இந்நிலையில், கிரிக்கெட்டில் தடம் பதித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தோனி குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “தோனியின் நம்பிக்கைக்குரிய பார்ட்னராக இருப்பது எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் உற்சாகமான மற்றும் மகிழ்ச்சியான காலகட்டம் . எங்களுடைய பார்ட்னர்ஷிப் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 7+18” என தங்களின் ஜெர்சி நம்பரை கடைசியில் குறிப்பிட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Chella

Next Post

”விவசாய நிலங்களை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை”..! அமைச்சர் எ.வ.வேலு

Fri Aug 26 , 2022
பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது, விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே எண் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு மாறுபடும். எனவே, கையகப்படுத்தும் நிலத்திற்கான சந்தை […]
”8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை”..! அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி..!

You May Like