இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 252 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு 1,050 கோடி ரூபாயாகும் என்று “ஸ்டாக் குரோ” என்ற நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த பட்டியலில் கோலி “ஏ பிளஸ்” பிரிவில் உள்ளார். அதனால், இவருக்கு ரூ.7 கோடி சம்பளமாக கிடைக்கும். அதுமட்டுமின்றி ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் வருமானம் வருகிறது. இதுமட்டுமின்றி ஐபிஎல்லில் பெங்களுரு அணி உடனான ஒப்பந்தம் மூலம் ஆண்டு தோறும் ரூ.15 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
பல பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் விராட் கோலி, ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக ஆண்டுக்கு ரூ.7.50 கோடி முதல் ரூ.10 கோடி வரை கட்டணம் வசூலிக்கிறார். இன்ஸ்டாகிராம் ஒரு போஸ்டருக்கு 8.9 கோடியும், ட்விட்டரில் ஒரு பதிவிற்கு 2.5 கோடியும் வருமானம் பெறுகிறார் விராட் கோலி. இன்னும் பல சொத்துக்கள் அசையாத சொத்துகளும் ரூ.31 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களும் வைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமானம் வாங்குபவராக விராட் கோலி உள்ளார்.