fbpx

வலது கை பேட்ஸ்மேனாக ஆட்டம் காட்டிய வார்னர்..!! பெவிலியனுக்கு அனுப்பி வைத்த அஸ்வின்..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-வது போட்டியிலும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்தூரில் செப்.24ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 399/5 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக சுப்மன் கில் 104, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கேஎல் ராகுல் 52, சூர்யகுமார் யாதவ் 72* ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைக்க உதவினர். அந்த சூழ்நிலையில் மழை வந்ததால் 33 ஓவரில் 317 என்ற புதிய இலக்கை மீண்டும் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு நிதானத்தை வெளிப்படுத்த முயற்சித்த மார்னஸ் லபுஸ்ஷேனை 27 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி அஸ்வின் மேஜிக் செய்தார். ஆனால் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் இடது கை பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவார் என்பதை தெரிந்து அஸ்வினை வலது கை பேட்ஸ்மேனாக மாறி எதிர்கொண்டு பவுண்டரியை அடித்தார்.

அப்போது பெவிலியனிலிருந்த ஆஸ்திரேலிய அணியினர் சிரித்த நிலையில் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மீண்டும் சாதூரியமாக செயல்பட முயற்சித்த வார்னர், வலது கை பேட்ஸ்மேனாக துவங்கி திடீரென இடது கை பேட்ஸ்மேனாக மாறி அஷ்வினை சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால், அஸ்வின் சரியான லைனை வீசியதால் தவறாக கணித்த வார்னரை 53 ரன்களில் எல்டபிள்யூ முறையில் அவுட்டாக்கி பதிலடி கொடுத்தார். அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லீஷையும் 6 ரன்களில் காலி செய்தார்.

அவர்களைத் தொடர்ந்து வந்த அலெக்ஸ் கேரி 14, கேமரூன் கிரீன் 19 ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட பின்னடைவில் கடைசியில் சீன் அபௌட் 54 ரன்கள் எடுத்தும் 28.2 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு அபார வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும், இப்போட்டியில் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளது 2023 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Chella

Next Post

மத்திய ரிசர்வ் படை காவலர் அறைந்ததால், உயிரிழந்த நபர்....! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை....!

Mon Sep 25 , 2023
மகாராஷ்டிராவில் கார் ஹெட் லைட் உடைந்ததால், அதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்ட ஒரு நபரை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் அரைந்ததில், அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ,மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் மீது, வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, நாக்ப்பூர் பகுதியில் மாதா கோவில் அருகே நிகில் குப்தா என்பவர் தன்னுடைய சகோதரியை […]

You May Like