எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் சூர்ய குமார் யாதவின் பிரமாதமான ஆட்டம் இன்று பேசுபொருளாகி வைரலாகி வருகின்றது.
டி20 உலககோப்பை ஆட்டத்தில் நேற்று ஜிம்பாப்வேவுடன் மோதியது இந்தியா. இதில் சூர்யகுமார் யாதவ் 61 ரன்களை எடுத்து விளாசினார். நேற்றுடன் அவர் மொத்தம் 1000 ரன்களை எடுத்தார். முதன்முதலில் 1000 ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற பட்டத்திற்கும் சொந்தக்காரர் ஆனார்.
இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் வெறும் 25 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் மைதானத்தின் நான்கு புறங்களிலும் விளாசி 61 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 186 ரன்கள் குவித்து, ஜிம்பாப்வே அணியை 115 ரன்கள் சுருட்டி அபார வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ” அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்த போட்டியில். நாங்கள் தேடிக் கொண்டிருந்த ஒன்று இது. நாங்கள் தற்போது தகுதி பெற்றுள்ளோம். நாங்கள் எங்கள் வழியில் வெளியில் வந்து சுதந்திரமாக விளையாட விரும்பினோம். நாம் அதை அடைந்திருக்கிறோம் ” என்று கூறினார்… சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு என்ன செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மிகச் சிறப்பான முறையில் தைரியமாக வெளியே வந்து விளையாடியது மூலம் மற்றவர்களின் ரன் அழுத்தத்தை குறைக்கிறார். அவருடைய திறன் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது இன்னொருவர் தன் விருப்பத்திற்கு விளையாட உதவியாக இருக்கிறது. அவர் பேட்டிங் செய்யும்பொழுது டக் அவுட் மிகவும் திருப்தியாக இருக்கும். அவர் பேட் செய்கையில் மிகவும் நிதானமாகவும் இருக்கிறார். அவரிடம் நாங்கள் இதை எதிர்பார்த்தோம். அவர் தற்போது வேறு ஒரு லெவலுக்கு சென்று விட்டார்”
இதனிடையே வைட் பந்தை சிக்சர் அடித்ததுதான் இந்த விளையாட்டின் ஹைலைட்டானது. இப்படி கூட அடிக்க முடியுமா? என்ற அளவிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சூர்யகுமார் யாதவ். இந்த காட்சிகள் வலைத்தலத்தில் வைரலாகி வருகின்றது.