விராட்கோலி ஜிம்பாம்வே உடனான போட்டியில் ஒரு கணம் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு நின்ற வீடியோ வைரலாகி வருகின்றது.
டி20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே-இந்தியா நேற்று விளையாடியது. இதில் சிறந்த ரன்னரான விராட் கோலி விளையாடினார். ரன் எடுப்பதில் இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. இந்த சூழலில் பலர் ஓட முடியாமல் தோற்றுப்போய் உள்ளனர். அந்தஅளவுக்கு விராட் கோலி ஓடுவார்.
இந்நிலையில் நேற்றை ஆட்டத்தில் 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அப்போது திடீரென ஒரு கணம் மூச்சு வாங்கியபடி நின்றார். ஆஸ்திரேலியன் மைதானம் அந்த அளவிற்கு எளிதான பவுண்டரி கிடையாது. எனினும் அவர் நிறை போட்டிகளில் இதே மைதானத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை கொடுத்துள்ளார். இரண்டு முறை ஓடிச் சென்று ரன் எடுத்தபோது நெஞ்சை பிடித்தபடி 3 விநாடிகள் அவர் நின்றார். இதனால் பெரும் பதற்றம் ஆனது.
ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டபடியே குழம்பிப் போய் நின்றனர். தொடர்ந்து அவர் சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு திரும்பினார். இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், ’’ அவர் ஒரு குயிக்காக ரன் எடுக்கும் ஒரு நபர். ஃபீல்டர் எங்கெங்கு இருக்கின்றார்கள் என அவருக்கு தெரியும். எனவே இதை எல்லாம் கணக்கில் கொண்டு மூச்சுவிடுவதற்காக நின்றிருப்பார்.’’ என்றார். 2 அல்லது 3 விநாடிகளுக்கு பின்னர் அவர்மீண்டும் ரன் எடுக்கத் தொடங்கிவிட்டார்.