fbpx

இந்தியா நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லுமா?

ஒருவேளை செமி ஃபைனல் போட்டி ரத்தானால் நேரடியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா , இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது. வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த போட்டியில் ஒரு வேளை மழை தடை செய்தால் என்ன ஆகும் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் நாட்களிலும் ஆட்டம் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவ்வாறு நடந்தால் டேபிள் டாப்பர்களாக இருக்கும் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் நேரடியாக மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது. பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை 33 ரன்னிலும், நெதர்லாந்தை 6 விக்கெட்டிலும், வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயிடம் 1 ரன்னிலும் தோற்றது.

அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூதி, இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப்கான் (10 விக்கெட்), ஷகீன்சா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ந்தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இறுதிப் போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் நாளைய அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

கனவில் வந்த நரபலி...! கதவை பூட்டிய தாய்..!! பெற்ற மகளை துடிதுடிக்க கொன்ற கொடூரம்..!!

Tue Nov 8 , 2022
பெற்ற மகளை தாயே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம் ராஜஸ்தானில் அரங்கேறி இருக்கிறது. இதுதொடர்பாக கோட்டா அருகே உள்ள பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான ரேகா கன்வர் ஹடா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தருண் காந்த் சோமணி, “கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவரது மூத்த மகன் நிகேந்திர சிங்கின் இதயத்தில் பிரச்சனை […]
கனவில் வந்த நரபலி...! கதவை பூட்டிய தாய்..!! பெற்ற மகளை துடிதுடிக்க கொன்ற கொடூரம்..!!

You May Like