இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல்போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர். ஆனால், பந்துவீச்சு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. உலகக்கோப்பை முன்பாக பந்துவீச்சில் தயாராக இந்த தொடர் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங், பந்துவீச்சில் பலமாக உள்ள தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் எனவும் கருதப்படுகிறது. குறிப்பாக பேட்டிங்கில் ஹென்ட்ரிக்ஸ், கிளாஸன், குவின்டன் டி காக், லுங்கி நிகிடி, ஷம்ஸி, ரபாடா சிறப்பான பார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. இந்த 2 அணிகளும் 20 ஓவர் உலகக்கோப்பையில் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.