fbpx

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்..!! விசாரணை குழுவை அமைத்தது மத்திய அரசு..!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றசாட்டுகளை விசாரிக்க குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, அதுகுறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, மத்திய அரசின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை திரும்பப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல மல்யுத்த வீராங்கனை மேரிகோம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை திருப்தி முர்குண்டே, முன்னாள் டாப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜகோபாலன் மற்றும் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்த மல்யுத்த சம்மேளத்தின் ஒருமாத கால நடவடிக்கையை கண்காணிப்பார்கள். அதே போல, தற்போதைய பாலியல் குற்றசாட்டுகள், மற்ற பிற குற்றசாட்டுகளையும் இந்த குழு விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’குக் வித் கோமாளி’ சீசன் 4..!! அதிரடியாக களமிறங்கும் பிரபலங்கள்..!! லிஸ்ட் ரெடி..!!

Tue Jan 24 , 2023
’குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகராக விஜய் டிவி ரசிகர்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும் பெற்ற ரியாலிட்டி ஷோவாக உள்ளது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பட வாய்ப்புகளை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையில், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களோ, அதை போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள […]

You May Like