fbpx

”யாம் இருக்க பயமேன்.. நான் பாத்துக்குறேன்”..! ஹர்திக்கின் கண் சிக்னல் வீடியோ வைரல்..!

தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என ஹர்திக் பாண்டியா கண்ணால் சிக்னல் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கே.எல்.ராகுல் ரன் கணக்கை தொடங்காமல் வெளியேறினார். கேப்டன் ரோகித் ஷர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 100ஆவது போட்டியில் விளையாடிய விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். சூர்யகுமார் 18 பந்துகளில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. பின்னர், ஆல்ரவுண்டர்கள் ஜடேஜாவும், ஹர்திக் பாண்டியாவும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசி இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19ஆவது ஓவரில் இந்திய அணி 14 ரன்கள் எடுத்தது.

”யாம் இருக்க பயமேன்.. நான் பாத்துக்குறேன்”..! ஹர்திக்கின் கண் சிக்னல் வீடியோ வைரல்..!

இறுதி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க, 3-வது பந்தில் ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்கவில்லை. எனினும் எந்த பதற்றமும் அடையாத பாண்டியா, நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என கண்ணால் சிக்னல் கொடுத்தார். அவர் சொன்னதுபோலவே, அடுத்த பந்திலேயே சிக்ஸர் விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். களத்தில் அவரது செய்கையும் மற்றும் தன்னால் முடியும் என்று நம்பிக்கையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஹர்திக் பாண்டியா கண்ணால் சிக்னல் கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

”யாம் இருக்க பயமேன்.. நான் பாத்துக்குறேன்”..! ஹர்திக்கின் கண் சிக்னல் வீடியோ வைரல்..!

5 விக்கெட்களை இழந்த இந்திய அணி, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது. 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன், ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

https://twitter.com/Shaikh_Abbas98/status/1564063443484692480?s=20&t=PdP-4-fGzpJ7K3Q6QHYtSw

Chella

Next Post

எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு..! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Mon Aug 29 , 2022
தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 7129 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், அணையிலிருந்து 7428 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. […]
எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு..! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

You May Like