நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சர்வைவர் த்ரில்லரான ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸின் சீசன் 3 வெளியாகியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. அதனை தொடர்ந்து இதன் 2-வது சீசன் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தநிலையில், இந்த தொடரின் 3-வது சீசன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்த தொடரின் டீசர், டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும், இந்த ‘ஸ்குவிட் கேம் சீசன் 3’ தான் இந்த தொடரின் கடைசி சாப்டர் ஆகும். ஆறு எபிசோட்களும் இப்போ ஸ்ட்ரீமிங் ஆகுது. இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹ்யுக் சொல்றார், “கி-ஹன் எப்படி மறுபடியும் ஆட்டத்துக்கு திரும்பி, சவால்களை எதிர்கொள்றான்னு இந்த சீசன்ல பார்ப்போம். அவனோட மாற்றமும், தடைகளை எப்படி கடக்குறான்னு கதை சொல்லுது.”
கி-ஹனோட நடிகர் லீ ஜங்-ஜே, “எத்தனையோ பேர் இறந்ததுல, குறிப்பா நண்பன் ஜங்-பே இறந்ததுல, கி-ஹன் மனசு உடைஞ்சிருக்கும். அவனால சாதாரணமா இருக்க முடியாது,”னு சொல்றார். ஆனா, ஒரு உரையாடல் கி-ஹனோட மனநிலையை மாற்றுது. “இந்த காட்சி ரொம்ப உருக்கமா இருக்கும். இது நம்ம வாழ்க்கையிலயும் தனியா வாழ முடியாதுனு, எவ்வளவு துன்பம் வந்தாலும் முன்னோக்கி போகணும்னு சொல்லுது,”னு அவர் குறிப்பிடுறார். தோல்வி, துரோகம், நண்பனோட இழப்பு இதையெல்லாம் கடந்து கி-ஹன் எப்படி எழுவான்னு பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Readmore: நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டம்…! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு..!