இந்திய சினிமா வரலாற்றில் மறக்க முடியாத திரை ஜோடிகளில் ஒன்றாக கமல்ஹாசன் – ஸ்ரீதேவி ஜோடி இடம்பிடித்துள்ளது. இந்த ஜோடி இணைந்து நடித்த மூன்றாம் பிறை படம் இன்று வரை உணர்ச்சிப் பூர்வமான நடிப்பின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் தாயாரையும் கவர்ந்தது.. ஆம்.. அவர் ஒரு காலத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவியை நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பாத்தாராம்..
2018 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி மறைவுக்குப் பிறகு, கமல்ஹாசன் “The 28 Avatars of Sridevi” என்ற தலைப்பில் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். அதை அவர் ஸ்ரீதேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வாசித்தார். அந்த குறிப்பில், ஸ்ரீதேவியின் தாயார் தங்கள் இருவரும் திருமணம் செய்ய வேண்டும் எனப் பலமுறை கூறியதாக கமல் பகிர்ந்திருந்தார். ஆனால் ஸ்ரீதேவி தாயாரின் யோசனையை தொடர்ந்து கமல்ஹாசன் மறுத்து வந்ததாகவும் கூறினார்.
“நான் ஸ்ரீதேவியை என் குடும்பத்தில் ஒருவராகவே பார்த்தேன். அவரை மணக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஸ்ரீ தேவியும் என்னை அப்படி தான் நினைத்திருந்தார். எங்கள் உறவு மிகவும் மரியாதையுடனும் தூய்மையுடனும் இருந்தது..” என்று கமல் கூறியிருந்தார்.
ஸ்ரீதேவி எப்போதும் கமலை “சார்” என்று அழைத்தாராம். அது அவர் கமலுக்கு காட்டிய மிகுந்த மரியாதையின் அடையாளமாக இருந்தது.
கமல் – ஸ்ரீ தேவி முதல் சந்திப்பு
கமல் மற்றும் ஸ்ரீதேவி முதன்முதலாக சந்தித்தது 1976 ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கிய “மூன்று முடிச்சு” படப்பிடிப்பில் தாந்து. அப்போது ஸ்ரீதேவி வயது வெறும் 13 தான். கமல்ஹாசன் அந்தப் படத்தில் நடித்ததுடன், உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அவருக்கு ஸ்ரீதேவிக்கு உரையாடல்களையும் காட்சிகளையும் பயிற்சி அளிக்கும் பொறுப்பும் இருந்தது.
பின்னர் கமல் – ஸ்ரீ தேவி ஜோடி வறுமையின் நிறம் சிவப்பு, சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே, வாழ்வே மாயம், மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை போன்ற பல படங்களில் இணைந்து நடித்தனர். குறிப்பாக “மூன்றாம் பிறை” திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு தான் “Sadma” — இது இருவரையும் தேசிய அளவில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
ஆனால் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியின் உறவு காதலைத் தாண்டிய மரியாதை, நம்பிக்கை, கலைப்பற்று ஆகியவற்றின் அடையாளமாக என்றும் நினைவில் நிற்கிறது.
Read More : படையப்பா சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த செயல்.. எமோஷனல் ஆன நடிகை..! அவருக்கு இப்படி ஒரு மனசா..?



