சிங்கப்பூரின் தேசிய சின்னமாக விளங்கும் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில்.. இத்தனை சிறப்புகளா..?

singapore perumal temple 11zon

சிங்கப்பூரின் பழமையான மற்றும் பிரபலமான இந்துக் கோயில்களில் ஒன்றாக, அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளது. நாட்டின் முக்கிய ஆன்மிக மையமாகவும், சுற்றுலா வாசிகளை ஈர்க்கும் இடமாகவும் இந்த கோயில் விளங்குகிறது.


1855ம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பெனியரால் விற்கப்பட்ட நிலத்தில் நரசிங்கம் என்பவரால் நரசிம்ம பெருமாள் கோயில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில், நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சனேயர், பிள்ளையார் சிலைகள் இக்கோயிலின் வளாகத்தில் வழிபட்டனர்.

1907 முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியம் மேலாண்மை மேற்கொண்டு, பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் கோயில் பராமரிக்கப்பட்டது. 1963ல், தமிழ்நாட்டிலிருந்து சிற்பிகளைக் கொண்டு கோயிலின் சிற்ப வேலைகள் நடைபெற்று, 1966ம் ஆண்டில் தற்போதைய கட்டட அமைப்பில் கட்டி முடிக்கப்பட்டது.

நரசிங்க பெருமாள் கோயில், பின்னர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் என பெயர் மாற்றப்பட்டது. நரசிங்க உருவத்தின் பதிலாக, திருப்பதி வேங்கடேசப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்ய இந்தியாவில் இருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டன.

கோயிலின் கட்டட அமைப்பு:

* 1966ல் புதுப்பிக்கப்பட்ட பின், ஐந்து நிலைகளைக் கொண்ட 20 அடியில் இராஜ கோபுரம் கட்டப்பட்டது.

* கோபுரம் விமானத்தில் சுதை சிற்பங்களுடன், தாயார், ஆண்டாள், பெருமாள் உருவங்களை காட்சியாகக் காட்டுகிறது.

* தென்னிந்திய கட்டடக்கலை நுட்பங்கள் நிறைந்த கட்டட அமைப்பில், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன.

* கருவறை மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உத்ஸவத் திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு, அன்றாட பூஜைகள் நடைபெறுகின்றன.

* ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரம் இந்தியாவில் இருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது.

* காரைக்குடியில் தேர்ந்த கலைஞர்களால் இராஜ கோபுரத்திற்கான நுட்ப கதவுகள் செய்யப்பட்டுள்ளன.

* கருவறைக்கு மேலே அமைந்த விமானம் வண்ணமயமான வட்ட வடிவத்தில் ஒன்பது கோள்களை சித்தரிக்கிறது.

நவம்பர் 1978ல், இந்த ஆலயம் சிங்கப்பூரின் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்க அங்கீகாரம் பெற்றது. இக்கோயில், சிங்கப்பூரில் வாழும் இந்து மக்களுக்கு வழிபாட்டு தலமாகவும், கலை மற்றும் பண்பாட்டு மையமாகவும், சுற்றுலா வாசிகளுக்கு கவர்ச்சிகரமான இடமாகவும் திகழ்கிறது.

Read more: மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. நடு ரோட்டில் கதையை முடித்த கணவன்.. கனவிலும் நினைக்காத கொடூர சம்பவம்..!!

English Summary

Srinivasa Perumal Temple, the national symbol of Singapore.. is it so special..?

Next Post

ஷாக்!. இந்தியாவில் தங்கத்தின் விலை 7 நாட்களில் ரூ.35,400 உயர்வு!. இந்த வாரம் எதிர்பார்ப்பு என்ன?

Mon Sep 8 , 2025
இந்தியாவில் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. 24 காரட், 22 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. செப்டம்பர் 1 முதல் 7 வரை, 24 காரட் தங்கத்தின் விலை 100 கிராமுக்கு ரூ.35,400 ஆகவும், 10 கிராமுக்கு ரூ.3,540 ஆகவும் உயர்ந்துள்ளது. வரும் வாரத்தில், பாதுகாப்பான முதலீடுகளுக்கான உணர்வுகள் அமெரிக்க மத்திய வங்கி கொள்கை மாற்றங்கள் மற்றும் […]
indian traditional gold jewellery beautiful 1047188 27813

You May Like