3 தொகுதிகள் கேட்ட ஓபிஎஸ்-க்கு ஷாக்..! ஸ்டாலின் கொடுத்தது எத்தனை தொகுதிகள் தெரியுமா? பரபரப்பு தகவல்..!

Tamil News lrg 3995383 1

முன்னாள் முதல்வரும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவருமான ஓபிஎஸ் தமிழக அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டார்.. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.


இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர், சிலர் திமுகவிற்கும், வேறு சிலர் தவெகவுக்கும் சென்றுவிட்டனர். ஓபிஎஸ்-ன் அரசியல் ஆதரவாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டார்.. இதனால் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது..

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.. மேலும் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும்,.. திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார். ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவார் அல்லது திமுக கூட்டணியில் இணைவார் என்று கூறப்பட்டது..

அதன்படி இன்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்.எல்.ஏவுமான ஐயப்பனும் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்..

இந்த நிலையில் ஓபிஎஸ்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, ஓபிஎஸ் தனக்கு 3 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு, தனது மகன் ரவீந்திரநாத், தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் என 3 பேருக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டாராம்.. ஆனால் போடி தொகுதி மட்டுமே ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.. கடந்த 3 தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் இந்த முறை திமுக சார்பில் போடி தொகுதியில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் ஓபிஎஸ் எந்த தொகுதியில் போட்டுயிடுவார் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்..

Read More : “சர்வாதிகாரி இபிஎஸ் இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது..” திமுகவில் இணைந்த பின் ஓபிஎஸ் பேட்டி.!

RUPA

Next Post

MLA பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்..! திமுகவில் இணைந்த கையோடு அதிரடி..!

Fri Feb 27 , 2026
அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், ஜெயலலிதாவின் தீவிரவ் விசுவாசியும், 3 முறை முதல்வருமான ஓபிஎஸ் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை.. திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ்-ஐ வரவேற்று முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதில் “ ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட […]
Ops Stalin 2

You May Like