தனிக் கட்சி தொடக்கமா? யாருடன் கூட்டணி..? இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் சசிகலா..!

VK Sasikala 2026

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்..


சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என அவர் மேற்கொண்ட எந்த முயற்சிக்கும் இபிஎஸ் சம்மதிக்கவில்லை.. மேலும் எக்காரணம் கொண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார்..

எனவே இத்தனை ஆண்டுகள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொறுமை காத்து வந்த அவர், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வரும் சசிகலா, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தார்…

வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி, அதாவது ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று, சசிகலா தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. தென் மாவட்டங்களின் முக்கியப் பகுதியான பசும்பொன் மண்ணில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தி, அங்கு வைத்து கட்சியின் பெயர், கொள்கை மற்றும் கொடியை அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது..

இந்த நிலையில் நேற்று சென்னையில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் புதிய கட்சி தொடங்குகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்..

அதற்கு பதிலளித்த சசிகலா இன்று பசும்பொன்னில் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம்.. நாளை அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.. இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.. நல்ல தகவலை சொல்கிறேன்..” இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா தனிக் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. சசிகலா இன்று புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா? அப்படி தொடங்கினால் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்விகளுக்கு இன்று பதில் தெரிந்துவிடும்..

Read More : விஜய் அழுதது கூட Script தானா? என்ன Pitch-ல பேசனும் கூட எழுதி இருக்கு.. வைரலாகும் Script பேப்பர்..!

RUPA

Next Post

நிதி நெருக்கடியை தவிர்க்க வேண்டுமா..? செவ்வாய் கிழமை அன்று மறந்தும் கூட இந்த தவறுகளை பண்ணாதீங்க..!!

Tue Feb 24 , 2026
பொதுவாகவே மங்களகரமான நாள் என்று அழைக்கப்பட்டாலும், புதிய முயற்சிகளையும் சுப காரியங்களையும் தொடங்குவதற்கு மக்கள் தயங்கும் ஒரு நாளாக செவ்வாய்க்கிழமை இருந்து வருகிறது. செவ்வாய் கிரகம் வீரம் மற்றும் ஆக்ரோஷத்தின் அடையாளமாக கருதப்படுவதால், இந்த நாளில் சில செயல்களை செய்வது எதிர்மறையான விளைவுகளை தரும் என்பது ஐதீகம். அதே சமயம், வீரத்தின் அடையாளமான முருகப்பெருமானுக்கும், ராம பக்தன் அனுமனுக்கும் உரிய நாளாக இது போற்றப்படுகிறது. இந்த நாளில் மனதாரப் பிரார்த்தனை […]
Tuesday 2026

You May Like