SBI வங்கியில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..

bank job 1

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக 122 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:

  • மேனேஜர் (Credit Analyst) – 63
  • மேனேஜர் (Products – Digital Platforms) – 34
  • டெபியூட்டி மேனேஜர் (Products – Digital Platforms) – 59

வயது வரம்பு:

* கிரெடிட் அனலிஸ்ட் பிரிவில் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆகஸ்ட் 31 தேதியின்படி குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

* டிஜிட்டர் பிளாட்பாம் பிரிவில் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 28 முதல் 35 வயது வரையும், டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு 25 முதல் 32 வயது வரையும் இருக்க வேண்டும்.

* ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

கிரெடிட் அனலிஸ்ட் பிரிவு:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு.
  • நிதி பிரிவில் MBA / PGDBA / PGDBM / MMS / CA / CFA / ICWA ஆகிய தகுதிகளில் ஒன்று பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

டிஜிட்டல் பிளாட்பாம் பிரிவு:

  • B.E. / B.Tech (IT, Computer Science, Electronics, Electrical, Instrumentation, Electronics & Telecommunication)
  • MCA (Master of Computer Applications) 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்
  • MBA தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அனுபவம்:

* மேனேஜர் பதவிக்கு: குறைந்தபட்சம் 5 வருடம்

* டெப்யூட்டி மேனேஜர் பதவிக்கு: குறைந்தபட்சம் 3 வருடம்

சம்பளம்: மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் அதிகபடியாக ரூ.1,05,280 வழங்கப்படும்.
டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

* மேனேஜர் மற்றும் டெப்யூட்டி மேனேஜர் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு இல்லை. விண்ணப்பதாரர்களில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

* விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

* நேர்காணல் 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும்.

* அதில் தேர்ச்சி பெற்றவர்களின் மெரிட் பட்டியல் வெளியிடப்படும்.

* நேர்காணலுக்கான அழைப்பிதழ் விண்ணப்பதாரர்களுக்கு இமெயில் மூலமும், வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலமும் அறிவிக்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: 9 வயதில் அரியணை.. 10 மனைவிகள்.. 350 துணைவிகளுடன் வாழ்ந்த இந்திய மன்னர்..!! யார் தெரியுமா..?

English Summary

State Bank of India has announced 122 vacancies.

Next Post

6 நாட்களுக்கு மழை அடிச்சு ஊத்தப்போகுது.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அப்டேட்..!

Sun Sep 14 , 2025
The Meteorological Department has warned that there may be rain in Tamil Nadu from today to the 20th.
rain 2025 2

You May Like