அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேற்கொள்ள கூடாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நோய் பரவுவதாகவும்க் கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது,,


இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.. இந்த வழக்கு உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ஆலையில் நச்சு பொருட்களை வெளியேற்றுவது, பராமரிப்பது என பல பணிகளை அரசே செய்து வருகிறோம்.. ஆலை நிர்வாகத்திற்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு சில அனுமதிகளை வழங்கி இருக்கிறோம்.. ஆனால் ஆலை தரப்பில் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை கூறுகின்றனர்..” என்று தெரிவிக்கப்பட்டது..

இதை தொடர்ந்து நீதிபதிகள் “ தமிழக அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கி உள்ள கழிவுகளை நீக்க மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி உண்டு.. அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்..

RUPA

Next Post

நடுவானில் அடிதடி சண்டை..!! அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்..!! நடந்தது என்ன..?

Mon Apr 10 , 2023
ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, ஏர் இந்தியா விமானம் தொடர்பாக பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில், தற்போது டெல்லி விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஹீத்ரோ நகருக்கு ஏர் இந்திய விமானம் AI-111 இன்று காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அதில் டெல்லியில் இருந்து ஏறிய […]
விமான டிக்கெட் கட்டணம் 350% உயர்வு..!! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!! என்ன காரணம் தெரியுமா..?

You May Like