உலகம் முழுவதும் இன்னும் புரிந்து கொள்ள முடியாத அளவு ஆச்சரியங்களும், அதிசயங்களும் பரவி கிடக்கின்றன. நிலம் போலவே கடல், தீவுகள் என பல பகுதிகளில் மனிதனின் புரிதலை மீறும் மர்மங்களும் வினோதங்களும் புதைந்துள்ளன. மனித காலடி படாத நூற்றுக்கணக்கான தீவுகள் இருப்பதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அத்தகைய அதிசய உலகங்களில் ஒன்றாக திகழ்வது இந்தோனேசியா. சுமத்ரா, ஜாவா, சுலவேசி என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளை சேர்ந்த இந்த நாடு, இயற்கை அதிசயங்களால் மட்டுமல்ல, வினோத மரபுகளாலும் கவனத்தை ஈர்க்கிறது. சுமார் 30 கோடி மக்கள் வாழும் இந்த தீவுக் கூட்டங்களின் மத்தியிலும் தனித்த இனக்குழுவாக வாழும் மக்கள் தான் டோராஜன்.
இந்த சமூகத்தின் ஒரு அசாதாரண நம்பிக்கை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.“உடல் இறந்தாலும் ஆன்மா உயிரோடு இருக்கும்” என்ற அவர்களின் கருத்தின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் உடல்களை பார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருட்கள் மூலம் பாதுகாத்து, வீட்டிலேயே வைத்து பராமரிப்பது இவர்களின் மரபாக உள்ளது.
இவர்கள், இறந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கி, அவர்களுடன் வாழ்ந்துகொள்வது வழக்கம். இதனால் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் வலுவாக நிலவுகிறது. இதை நேரில் கண்ட ஆய்வாளர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்கிறார்கள்.
மரணம் வாழ்க்கையின் இயல்பான தொடர்ச்சி என்பதை டோராஜன் மக்கள் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதும், இந்த சமூகத்தின் மற்றொரு விசித்திர அம்சமாகும். சோகத்தை எப்படி சமாளிப்பது, மரணத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என அனைத்தையும் அவர்கள் குடும்ப மரபாக கற்பிக்கிறார்கள்.
Read more: தாம்பத்திய உறவை இனிக்க செய்யும் 7 அற்புதமான உணவுகள்..!! தம்பதிகளே கட்டாயம் இதை சாப்பிடுங்க..!!



