நாளை அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் வாபஸ்.. சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடரும்..!!

cylinder price 11zon

லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சிலிண்டர் விநியோகம் சீராக தொடரும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.


தமிழகத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஆகஸ்ட் 1, 2025 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக உறுதியளித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வரும் 1ம் தேதி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது.

நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கலந்துரையாடலின் அடிப்படையில், அவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் முக்கிய எரிசக்தி கூட்டாளியான இந்தியன் ஆயில், நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் பரிவுடன் இடையில்லா சேவையை வழங்குவதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: அட்டகாசம்..! 6000 பேருக்கு ரூ.40,000 கடன் வழங்கும் திட்டம்…! யாரெல்லாம் இதில் விண்ணப்பிக்க முடியும்…?

English Summary

The Lorry Owners Association has promised to call off the strike.

Next Post

இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பீர்களா?. இந்த தவறை செய்யாதீர்கள்!. சிறுநீரகத்திற்கு ஆபத்து!

Thu Jul 31 , 2025
நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப்பார்த்து செய்ய வேண்டிய கட்டாய உலகில் வாழ்ந்து வருகிறோம். சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும், இதில் வைட்டமின்கள் உள்ளதா? தாதுக்கள் நிறைத்திருக்கிறதா? என ஆராயவேண்டி உள்ளது. இவை அனைத்துமே ஆரோக்கியத்தை பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும்தான் …எவ்வளவு காசு சம்பாதித்தாலும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ இல்லையா நண்பர்களே! அவ்வாறு நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’. இத்தகைய நீர் […]
sleep before water 11zon

You May Like