அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு.. திருத்தணியில் சோகம்..!

23235918 wall 1

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 ம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த விபத்து, அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.

இந்த எதிர்பாராத விபத்தில், அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மோகித் என்ற மாணவன், இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more: SIR-க்கு பின் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்: 24 லட்சம் பேர் இறந்தவர்கள், 12 லட்சம் பேர் காணாமல் போனவர்கள்.!

English Summary

Student dies after government school wall collapses.. Tragedy in Tiruttani..!

Next Post

“உங்கள் டிடர்ஜெண்ட் ஒரு ஸ்லோ பாய்சன்.. புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்..” மருத்துவர் வார்னிங்..!

Tue Dec 16 , 2025
துணிகளை துவைத்த பிறகு நாம் பயன்படுத்தும் டிடர்ஜென்ட்கள் மற்றும் கிளீனர்கள் முழுமையாக பாதுகாப்பானவை என்று பெரும்பாலானோர் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், அவற்றில் மறைந்திருக்கும் சில வேதிப்பொருட்கள் மெதுவாக உடல்நலத்தை பாதித்து, ஹார்மோன் சமநிலையை குலைத்து, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று பிரபல புற்றுநோய் மருத்துவர் டாக்டர் தரங் கிருஷ்ணா எச்சரித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “உங்கள் துணி துவைக்கும் செயல்முறையில் நறுமணத்துடன் […]
detergent

You May Like